கூட்டணி ஆட்சி கவிழ சித்தராமையா காரணம் என சுதாகர் சத்தியம் செய்ய தயாரா?; பா.ஜனதா எம்.எல்.சி. எம்.டி.பி.நாகராஜ் திடீர் ஆவேசம்


கூட்டணி ஆட்சி கவிழ சித்தராமையா காரணம் என சுதாகர் சத்தியம் செய்ய தயாரா?; பா.ஜனதா எம்.எல்.சி. எம்.டி.பி.நாகராஜ் திடீர் ஆவேசம்
x

கூட்டணி ஆட்சி கவிழ சித்தராமையா காரணம் என சுதாகர் சத்தியம் செய்ய தயாரா என பா.ஜனதா எம்.எல்.சி. எம்.டி.பி. நாகராஜ் கேள்வி எழுப்பி உள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக முன்னாள் மந்திரி சுதாகர் தனது டுவிட்டர் பக்கத்தில், காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சியில் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருந்தனர். அவர்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவராக இருந்த சித்தராமையாவிடம் புகார் தெரிவித்தனர். அப்போது நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி நீடிக்காது என சித்தராமையா கூறினார். இதனால் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் சேர்ந்ததாகவும், கூட்டணி ஆட்சி கவிழ சித்தராமையாவே காரணம் எனவும் கூறியிருந்தார்.

இதற்கு பா.ஜனதா எம்.எல்.சி. எம்.டி.பி.நாகராஜ், சித்தராமையா பற்றி முன்னாள் மந்திரி சுதாகரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எம்.டி.பி.நாகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்து கூறியிருப்பதாவது:-

முன்னாள் மந்திரி சுதாகரின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் இணைய சித்தராமையா தான் காரணம் என சுதாகர் தனது குலதெய்வம் மீது சத்தியம் செய்ய தயாரா?. இவ்வளவு காலம் மவுனமாக இருந்துவிட்டு திடீரென்று குற்றம்சாட்டுவதன் நோக்கம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார். சுதாகரும், எம்.டி.பி.நாகராஜும் முன்பு காங்கிரசில் இருந்தனர். கூட்டணி ஆட்சியில் ராஜினாமா செய்த 17 எம்.எல்.ஏ.க்களில் இவர்கள் இருவரும் உண்டு. இந்த நிலையில் எம்.எல்.சி. ஆக இருக்கும் எம்.டி.பி.நாகராஜ் சித்தராமையாவுக்கு ஆதரவாகவும், சுதாகருக்கு எதிராகவும் கருத்து கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குருபா சமுதாயத்தை சேர்ந்த எம்.டி.பி.நாகராஜ், சித்தராமையாவின் நெருங்கிய ஆதரவாளராக இருந்தார் என்பதும், தற்போது காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளதால், மீண்டும் அவர் காங்கிரசில் சேர இவ்வாறு பேசியிருக்கலாம் என்றும் தகவல்கள் உலா வருகின்றன.


Next Story