நடுரோட்டில் குட்டியை ஈன்றெடுத்த யானை! வாகனங்களை சாலையோரம் நிறுத்தி அமைதி காத்த வாகன ஓட்டிகள்


நடுரோட்டில் குட்டியை ஈன்றெடுத்த யானை! வாகனங்களை சாலையோரம் நிறுத்தி அமைதி காத்த வாகன ஓட்டிகள்
x

எந்த வண்டியும் அவசரம் காட்டவோ, ஒலி எழுப்பி யானை கூட்டத்தை கலைக்கவோ இல்லை.

இடுக்கி,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், மறையூர் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை சாலையின் நடுவே யானை ஒன்று குட்டியை ஈன்றது.

இதன் காரணமாக, தமிழகம் மற்றும் கேரளாவை இணைக்கும் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மறையூர் பகுதி வழியாக செல்லும் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

கருவுற்றிருந்த யானை ஒன்று, பிரசவ வலி ஏற்பட்டதும், பிளிறலுடன் மரையூர் சாலைப் பகுதியை வந்தடைந்தது. பிளிறிக் கொண்டே வந்த யானையைக் கண்டதும் வாகனங்கள் தொலைவிலேயே நிறுத்தப்பட்டன.

நடுரோடில் தாய் யானை ஒன்று குட்டியை ஈன்றதால், அங்கு அதன் யானை கூட்டம் ஒன்றாக கூடி அந்த சாலையை மறித்து இருபுறமும் வாகனங்கள் செல்லாமல் தடுத்தது. இதனால் அந்த யானை பத்திரமாக குட்டியை ஈன்றெடுத்தது.

புதிதாகப் பிறந்த கன்றும் அதன் தாயும் அருகிலுள்ள காட்டுக்குள் சென்ற பிறகுதான் அந்த யானை கூட்டம் அங்கிருந்து நகர்ந்தது.

இந்த சம்பவத்தின்போது வாகன ஓட்டிகள் அமைதியாக பொறுமையுடன் காத்திருந்தனர். எந்த வண்டியும் அவசரம் காட்டவோ, ஒலி எழுப்பி யானை கூட்டத்தை கலைக்கவோ இல்லை.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், இது போன்ற சம்பவங்கள் வனப்பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி நடக்கின்றன என்றனர்.


Next Story