டுவிட்டர் பயனர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்த எலான் மஸ்க் : பயனர்கள் அதிர்ச்சி


டுவிட்டர் பயனர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்த எலான் மஸ்க் : பயனர்கள் அதிர்ச்சி
x

டுவிட்டர் பயன்பாட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார் எலான் மஸ்க்.

புதுடெல்லி,

பல்வேறு தகவல்கள், படங்கள் ஆகியவற்றை உலகம் முழுதும் உள்ளோருடன் பகிர்ந்து கொள்ள டுவிட்டர் வலைதளம் பெரிதும் பயன்படுகிறது. பல்வேறு துறை பிரபலங்கள் மட்டுமின்றி உலக தலைவர்கள் பலரும் டுவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர். உலகளவில் ஐந்தில் ஒருவருக்கு டுவிட்டர் கணக்கு உள்ளதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

இந்நிலையில் டுவிட்டர் தளம் உலகம் முழுதும் திடீரென முடங்கியது. இதனால் உலகளவில் டுவிட்டரில் தகவல்களை அனுப்ப முடியாமலலும் பெற முடியாமலும் கோடிக்கணக்கானோர் தவித்தனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தொழில்நுட்ப பணிகள் சரி செய்யும் நடவடிக்கையில் டுவிட்டர் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இதனிடையே டுவிட்டர் சேவை முடங்கி உள்ளதாக பயனர்கள் தெரிவித்து நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் எலான் மஸ்க் தற்காலிகமாக புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அதில்

டுவிட்டரில் அங்கீகரிக்கப்பட்ட பயணர்கள் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பதிவுகளையும், பிற பயனர்கள் ஆயிரம் பதிவுகளை, புதிய பயனர்கள் 500 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தேவையற்ற தகவல்களை ஒழிப்பதற்காக தற்காலிகமாக இந்த கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் விளக்கம் அளித்துள்ளார்.


Next Story