சத்தீஷ்காரில் என்கவுண்ட்டர்: 2 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை


சத்தீஷ்காரில் என்கவுண்ட்டர்: 2 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை
x

கோப்புப்படம் 

சத்தீஷ்காரில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலத்தில் நக்சலைட்டுகள் அச்சுறுத்தல்களால் நவம்பர் 7 மற்றும் 17-ந் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் சத்தீஷ்கார் மாநிலத்தில் கான்கேர் மாவட்டத்தில் உள்ள கோயாலிபேடா வனப்பகுதியில் போலீசார் நக்சலைட்டுகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். போலீசாரும் நக்சலைட்டுகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்த நக்சலைட்டுகளின் அடையாளம் இன்னும் தெரியவில்லை, அருகிலுள்ள பகுதிகளில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளில் கான்கேர் மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளும் அடங்கும்.


Next Story