விளைநிலங்களில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
விளைநிலங்களில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன.
பெங்களூரு: கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா அஜ்ஜிபுரா கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து கடந்த சில தினங்களாக காட்டு யானை புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் பீதியில் இருந்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள், அந்தப்பகுதியை சேர்ந்த பிரசன்னா, நஞ்சப்பா ஆகியோரின் நிலத்தில் புகுந்து பயிர்களை மிதித்து நாசம் செய்தன. மேலும் தென்னை கன்றுகளை பிடுங்கி எறிந்தன. மேலும் குடிநீர் குழாயை உடைத்து சேதப்படுத்தின. இதனால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்கள் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story