சுப்ரீம் கோர்ட்டு மூத்த வழக்கறிஞர் நாரிமன் காலமானார்


சுப்ரீம் கோர்ட்டு மூத்த வழக்கறிஞர் நாரிமன் காலமானார்
x
தினத்தந்தி 21 Feb 2024 9:12 AM IST (Updated: 21 Feb 2024 9:34 AM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டு மூத்த வழக்கறிஞர் நாரிமன் வயது முதிர்வு காரணமாக காலமானார்.

டெல்லி,

இந்தியாவின் தலைசிறந்த அரசியல் சாசன வழக்கறிஞர் பலி நாரிமன் (95). சுப்ரீம் கோர்ட்டு மூத்த வழக்கறிஞரான இவர் 1972 முதல் 1975 வரை மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகவும் செயல்பட்டுள்ளார். இவருக்கு பத்மபூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. இவர் 1999 முதல் 2005 வரை பரிந்துரைக்கப்பட்ட மாநிலங்களவை எம்.பி.யாகவும் செயல்பட்டுள்ளார்.

இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக பலி நாரிமன் தனது 95வது வயதில் இன்று காலமானார். டெல்லியில் உள்ள நாரிமனின் வீட்டில் அவரது உயிர் பிரிந்தது. நாரிமனின் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Next Story