நமது திறன்களை பயன்படுத்த இளைஞர்களின் ஆற்றல் அவசியம்: பிரதமர் மோடி பேச்சு
நாட்டில் கிடைக்க கூடிய அனைத்து வளங்களையும் பயன்படுத்த இளைஞர்களின் ஆற்றல் அவசியம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் நடந்த கவுசல் தீக்ஷந்த் சமரோ 2023 என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, இயற்கை அல்லது தாது வளங்கள் அல்லது நீண்ட கடலோர பகுதிகள் போன்ற எந்தவொரு நாட்டின் வலிமைகளையும் பயன்படுத்துவதில் இளைஞர்களின் ஆற்றலின் முக்கியத்துவம் பற்றி சுட்டி காட்டி பேசினார்.
வலிமையான இளைஞர் ஆற்றலை கொண்டு நாடு அதிக முன்னேற்றமடையும். அதனால், நாட்டின் வளங்களுக்கு நியாயம் கிடைக்க செய்யப்படும் என பேசியுள்ளார்.
அவர் இந்நிகழ்ச்சியில் வெளியிட்ட ஒரு வீடியோ செய்தியில் பேசும்போது, இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தொழில் நுட்பம் வழியே இணைந்துள்ளனர். ஒவ்வொரு நாட்டுக்கும் வெவ்வேறு திறன்கள் உள்ளன. ஆனால், அவற்றை பயன்படுத்த, இளைஞர்களின் ஆற்றல் அவசியம் என்று பேசியுள்ளார்.
Related Tags :
Next Story