சுரங்க வழக்கு தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில ஐஏஎஸ் அதிகாரிக்கு அமலாக்கத்துறை சம்மன்..!


சுரங்க வழக்கு தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில ஐஏஎஸ் அதிகாரிக்கு அமலாக்கத்துறை சம்மன்..!
x

சுரங்க வழக்கு தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் அருண் இலக்காவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ராஞ்சி,

முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிற ஜார்கண்ட் மாநிலத்தில், சட்டவிரோதமாக ரூ.1000 கோடிக்கும் அதிகமாக நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்து ஊழல் அரங்கேறி இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், சுரங்க வழக்கு தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் அருண் இலக்காவுக்கு அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது. ஐஏஎஸ் அதிகாரியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய மார்ச் 15-ம் தேதி (நாளை) பணமோசடி தடுப்பு ஏஜென்சி முன் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.


Next Story