படிப்புடன் சமூக சேவையிலும் ஈடுபடுங்கள்; பட்டமளிப்பு விழாவில் மாணவ மாணவிகளுக்கு ஜனாதிபதி அறிவுரை


படிப்புடன் சமூக சேவையிலும் ஈடுபடுங்கள்; பட்டமளிப்பு விழாவில் மாணவ மாணவிகளுக்கு ஜனாதிபதி அறிவுரை
x
தினத்தந்தி 11 Oct 2023 6:19 PM IST (Updated: 11 Oct 2023 10:22 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் பல்கலை கழகத்தின் 20-வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.

புதுடெல்லி,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலை கழகத்தின் 20-வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. இதில், ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

அவருடைய பேச்சு பற்றி ஜனாதிபதியின் செயலகம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், பொறுப்புள்ள காஷ்மீர் இளைஞர்களால் நாடு பெருமையடைகிறது. காஷ்மீர் பல்கலை கழகத்தின் மாணவ மாணவிகள் படிப்புடன் கூட, சமூக சேவையிலும் ஆர்வமுடன் பங்காற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

அவர்கள் அப்படி செய்யும்போது, சமூக மாற்றங்களை கொண்டு வந்து ஓர் எடுத்துக்காட்டை உருவாக்க முடியும் என்றும் கூறினார்.

நாட்டுக்கு சேவையாற்றி, இந்த பல்கலை கழகத்தின் முன்னாள் மாணவ மாணவிகள் பெருமையை கொண்டு வந்துள்ளனர் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறிய அவர், காஷ்மீர் பல்கலை கழகத்தில் 55 சதவீதம் பேர் மாணவிகள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story