ஓய்வுபெற்று ஊர் திரும்பிய ராணுவ வீரருக்கு உற்சாக வரவேற்பு


ஓய்வுபெற்று ஊர் திரும்பிய ராணுவ வீரருக்கு உற்சாக வரவேற்பு
x

தார்வாரில் ஓய்வுபெற்று ஊர் திரும்பிய ராணுவ வீரருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தார்வார்:

தார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகா தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் பசப்பா நேகினாலே. இவர் தனது இளம் வயதில் ராணுவத்தில் பணிக்கு சேர்ந்தார். தொடர்ந்து அவர் 21 ஆண்டுகளாக ரானுவத்தில் பணியாற்றினார். தற்போது விருப்ப ஓய்வுபெற்ற அவர் நேற்று தனது சொந்த கிராமத்திற்கு வந்தார். அப்போது அவருக்கு கிராமத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் ஊர்வலமாக வர அவர்களை தொடர்ந்து இளைஞர்கள் பட்டாளம் புடைசூழ திறந்த ஜீப்பில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சுரேஷ் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அவருக்கு வழிநெடுகிலும் கிராம மக்கள் சாலையில் இருபுறமும் நின்று வாழ்த்து தெரிவித்து மாலை அணிவித்தனர். மேலும் அவர் மீது பூக்களையும் தூவினார்கள். பின்னர் நடந்த பாராட்டு விழாவிலும் அவர் கலந்து கொண்டு பேசினார்.


Next Story