"கேரள கவர்னரின் ஒரு முடியை தொட்டால் கூட... மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும்" - சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்


கேரள கவர்னரின் ஒரு முடியை தொட்டால் கூட... மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும் - சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்
x

கேரள கவர்னரின் ஒரு முடியை தொட்டால் கூட கேரள அரசை கலைக்க மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், அந்த மாநில அரசு மற்றும் அதன் மந்திரிகள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அண்மைக் காலமாக கேரள கவர்னருக்கும், கேரள அரசுக்கும் இடையே கடுமையான மோதல் மோக்கு நிலவி வருகிறது.

இந்த நிலையில் இது குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது;-

"கவர்னர் என்பவர் ஜனாதிபதியையும், மத்திய அரசையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பதை கேரள கம்யூனிஸ்டுகள் புரிந்து கொள்ள வேண்டும். கேரள கவர்னரின் ஒரு முடியை தொட்டால் கூட கேரள அரசை கலைக்க மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும்."

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



Next Story