நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு முன்பு மசோதாக்களை நிறைவேற்றக்கூடாது என்று விதிமுறை இல்லை - பியூஷ் கோயல்


நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு முன்பு மசோதாக்களை நிறைவேற்றக்கூடாது என்று விதிமுறை இல்லை - பியூஷ் கோயல்
x

கோப்புப்படம்

நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு முன்பு மசோதாக்களை நிறைவேற்றக்கூடாது என்று விதிமுறை இல்லை என்று பியூஷ் கோயல் தெரிவித்தார்.

புதுடெல்லி,

நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாமல், மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மத்திய மந்திரி பியூஷ் கோயல் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு, நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டு, பெரும்பான்மையை நிரூபித்த பிறகுதான் மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என்று எந்த விதிமுறையும் இல்லை. அத்தகைய முன்னுதாரணமும் கிடையாது.

மத்திய அரசுக்கு மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருப்பது அனைவருக்கும் தெரியும். நம்பிக்கையில்லா தீர்மானத்தை எப்போது விவாதத்துக்கு எடுப்பது என்று முடிவு செய்வது சபாநாயகரின் தனி உரிமை.

அதை எப்போதும் சந்திக்க தயாராக இருக்கிறோம். எதிர்க்கட்சிகள்தான் விவாதிக்க பயந்து ஓடுகின்றன. மத்தியிலும், மணிப்பூரிலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அங்கு நிலைமை எப்படி இருந்தது என்பது வெளிவந்து விடும். அதனால் காங்கிரஸ் அம்பலப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.


Next Story