குஜராத்தில் பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ. காங்கிரசில் இணைந்தார்
குஜராத் பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ.வான பால்கிருஷ்ண படேல் நேற்று காங்கிரசில் சேர்ந்தார்.
ஆமதாபாத்,
குஜராத் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ.வான பால்கிருஷ்ண படேல் நேற்று காங்கிரசில் சேர்ந்தார்.
ஆமதாபாத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் அதன் மாநில தலைவர் ஜெகதீஷ் தாக்கோர், முன்னாள் தலைவர் சித்தார்த் படேல் முன்னிலையில் அவர் இணைந்தார்.
வதோதரா மாவட்டத்தில் உள்ள தாபோய் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான பால்கிருஷ்ண படேலுக்கு கடந்த 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
'பா.ஜ.க.வுக்காக நான் அர்ப்பணிப்போடு கடினமாக உழைத்தாலும், புறக்கணிக்கப்பட்டேன், ஒதுக்கப்பட்டேன். அதனால்தான் அந்தக் கட்சியில் இருந்து விலகியுள்ளேன். வருகிற சட்டசபை தேர்தலில் வாய்ப்பு எதையும் எதிர்பார்த்து நான் காங்கிரசில் இணையவில்லை' என செய்தியாளர்களிடம் பேசிய பால்கிருஷ்ண படேல் தெரிவித்தார்.