ரெயில்வே போலீஸ் கொலை வழக்கு; முன்னாள் எம்.பி.க்கு ஆயுள் தண்டனை


ரெயில்வே போலீஸ் கொலை வழக்கு; முன்னாள் எம்.பி.க்கு ஆயுள் தண்டனை
x

ரெயில்வே போலீஸ் கொலை வழக்கில் முன்னாள் எம்.பி.க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் எம்.பி. உமுக்ந்த் யாதவ். 1995 பிப்ரவரி 4-ம் தேதி ரெயில்வே போலீஸ் ரகுநாத் சிங் கொல்லப்பட்ட வழக்கில் உமுக்ந்த் யாதவ் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், ரெயில்வே போலீஸ் ரகுநாத் சிங் கொலை வழக்கில் முன்னாள் எம்.பி. உமுக்ந்த் யாதவ் உள்பட 7 பேரும் குற்றவாளிகள் என கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

குற்றவாளிகள் 7 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. இதனையடுத்து, முன்னாள் எம்.பி. உமுக்ந்த் யாதவ் உள்பட 7 பேரையும் சிறையில் அடைத்தனர்.


Next Story