மணிஷ் சிசோடியாவின் சிபிஐ மனு மீதான உத்தரவை ஒத்திவைத்தது நீதிமன்றம்


மணிஷ் சிசோடியாவின்  சிபிஐ மனு மீதான உத்தரவை ஒத்திவைத்தது நீதிமன்றம்
x
தினத்தந்தி 27 Feb 2023 5:06 PM IST (Updated: 27 Feb 2023 5:37 PM IST)
t-max-icont-min-icon

மதுபானக் கொள்கை வழக்கில் கைதான மணிஷ் சிசோடியாவின் சிபிஐ மனு மீதான உத்தரவை ஒத்திவைத்தது நீதிமன்றம்.

புதுடெல்லி,

மதுபானக்கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவை பல மணி நேர விசாரணைக்குப் பின் சி.பி.ஐ. அதிரடியாகக் கைது செய்தது. புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரில் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்த நிலையில் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்தநிலையில் மணிஷ் சிசோடியாவை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி சிபிஐ அனுமதி கோரியது. இந்தநிலையில் சிபிஐ மனு மீதான உத்தரவை ஒத்திவைத்தது ரோஸ் அவென்யூ நீதிமன்றம். இதனையடுத்து அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதனிடையே மணிஷ் சிசோடியா கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர், பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story