அரியவகை நோய் சிகிச்சைக்காக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு சுங்க வரியில் விலக்கு - மத்திய அரசு அறிவிப்பு


அரியவகை நோய் சிகிச்சைக்காக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு சுங்க வரியில் விலக்கு - மத்திய அரசு அறிவிப்பு
x

அரியவகை நோய் சிகிச்சைக்காக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு சுங்க வரியில் விலக்கு அளித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.


புதுடெல்லி,

அரியவகை நோய் சிகிச்சைக்காக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு சுங்க வரியில் விலக்கு அளித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அரிய வகை நோய் என கடந்த 2021ஆம் ஆண்டில் மத்திய அரசால் வரையறுக்கப்பட்ட நோய்களுக்கு வரி விலக்கு பொருந்தும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

10 கிலோ எடையுள்ள குழந்தைக்கு, அரிய நோய்களுக்கான சிகிச்சை செலவு ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை ஏற்படுகிறது. சிகிச்சை செலவை கருத்தில் கொண்டு, சுங்க வரியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பெம்ப்ரோலிசுமாப் உள்ளிட்ட மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முழுமையாக வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தவகை மருந்துகள் தேவைப்படும் பயனாளர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட, மத்திய சுகாதார ஆய்வாளர்களிடம் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்கும் போது, இந்த முழுவரிவிலக்கு அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இதுவரை வெளிநாடுகளிலிருந்து குறிப்பிட்ட மருந்துகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு, சில வரிகளை விதித்திருந்தது, தற்போது முழுவரிவிலக்கு அளித்து மத்திய அரசு அரசாணை அறிவித்துள்ளது.


Next Story