பா.ஜ.க. தேசிய செயற்குழு அரங்கு கண்காட்சியில் இடம்பிடித்த அயோத்தி ராமர் கோவில்..!!
பா.ஜ.க. தேசிய செயற்குழு அரங்கில் நடந்த கண்காட்சியில், அயோத்தி ராமர் கோவில் கட்டுமான காட்சிகள் இடம்பிடித்தன.
புதுடெல்லி,
மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம், டெல்லியில் நேற்று தொடங்கியது.
இந்த கூட்டம் நடைபெறுகிற புதுடெல்லி மாநகராட்சி கவுன்சில் கூட்ட மண்டபத்தில் கண்காட்சி ஒன்றும் தொடங்கி உள்ளது. இந்த கண்காட்சி 6 பொருள் அடிப்படையிலானதாகும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானம், காசி விஸ்வநாதர் ஆலயம் புதுப்பிப்பு, மகாகாளிஸ்வர் ஆலயம் புத்துயிரூட்டப்படல் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
பிரதமர் மோடி தலைமையில் இந்தியா உலகின் 'விஷ்வ குரு' ஆக உருவாகி வருவதாக காட்டும் காட்சிகளும் கண்காட்சியில் முக்கிய இடம் வகிக்கின்றன.
இந்தியாவை வலுவான நாடாக ஆக்குவதற்கான மத்திய அரசின் செயல் திட்டங்கள், கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தி பெற்ற வெற்றி தொடர்பான காட்சிகளும் கண்காட்சியில் இடம் பெற்று பார்வையாளர்களைக் கவர்ந்து வருகின்றன.
Related Tags :
Next Story