பேய் ஓட்டுவதாக கூறி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது
உத்தரபிரதேசத்தில் பேய் ஓட்டுவதாக கூறி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைதுசெய்தனர்.
சோன்பத்ரா,
உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா அருகில் பேயை ஓட்டுவதாக கூறி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கடந்த டிசம்பர் 29 அன்று பெண் ஒருவர் போலீசாரிடம் அளித்த புகாரில், ராஜ் ஷேக் என்ற நபர் பேய் ஓட்டும் பயிற்சி செய்வதாக கூறி தன்னை அழைத்ததாகவும், தான் சென்றதும் அவரது வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறினார்.
இந்த புகாரின் அடிப்படையில்,போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜ் ஷேக்கை தேடிவந்தனர். ஒரு ரகசிய தகவலின் பேரில், போலீசார் ராஜ் ஷேக்கை ஒரு ஹோட்டலுக்கு அருகில் கைது செய்தனர்.
Related Tags :
Next Story