ஜே.பி.நட்டாவுடன் காங். எம்.எல்.ஏ. மீண்டும் சந்திப்பு


ஜே.பி.நட்டாவுடன் காங். எம்.எல்.ஏ. மீண்டும் சந்திப்பு
x

மாநிலங்களவை தேர்தலில் கட்சிமாறி வாக்களித்த காங். எம்.எல்.ஏ. குல்தீப் பிஷ்னோய், ஜே.பி.நட்டாவை மீண்டும் சந்தித்தார்.

சண்டிகார்,

அரியானா மாநிலம் ஆதம்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. குல்தீப் பிஷ்னோய். இவர், முன்னாள் முதல்-மந்திரி பஜன்லாலின் இளைய மகன் ஆவார். கடந்த மாதம் நடந்த மாநிலங்களவை தேர்தலில் இவர் கட்சி மாறி ஓட்டு போட்டதால், காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்தார்.

இதையடுத்து, அவரது கட்சி பதவிகள் அனைத்தையும் காங்கிரஸ் மேலிடம் பறித்தது. பின்னர், ஆளும் பா.ஜனதாவுடன் குல்தீப் பிஷ்னோய் நெருங்க தொடங்கினார்.

கடந்த 10-ந் தேதி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவையும், பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டாவையும் அவர் சந்தித்தார். இந்நிலையில், நேற்று டெல்லியில் மீண்டும் ஜே.பி.நட்டா சந்தித்தார். அரியானா மாநில முதல்-மந்திரி மனோகர்லால் கட்டாரையும் குல்தீப் பிஷ்னோய் சந்தித்தார். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இருவருடனும் ஆலோசித்ததாக அவர் கூறினார்.

இருவருக்கும் புகழாரம் சூட்டினார்.


Next Story