சாலை பள்ளங்களை சீரமைக்க ரூ.7 ஆயிரம் கோடி செலவு; பெங்களூரு மாநகராட்சி தகவல்


சாலை பள்ளங்களை சீரமைக்க ரூ.7 ஆயிரம் கோடி செலவு; பெங்களூரு மாநகராட்சி தகவல்
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் சாலை பள்ளங்களை சீரமைக்க ரூ.௭ ஆயிரம் கோடி செலவி செய்யப்பட்டு இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பெங்களூரு:

பெங்களூருவில் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களில் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலும் அதிக அளவில் ஏற்படுகிறது. இதுஒருபுறம் இருக்க பெங்களூரு மாநகரில் சாலைகள் மிக மோசமாக இருப்பதாகவும், குண்டும்-குழியுமாக காட்சி அளிப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து கர்நாடக ஐகோர்ட்டு பெங்களூருவில் உள்ள சாலை பள்ளங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பெங்களூரு மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில் பெங்களூரு மாநகராட்சி சார்பில் கடந்த 2019 முதல் 2021-ம் ஆண்டு வரையிலான 3 ஆண்டுகளில் மட்டும் சாலைகளில் உள்ள பள்ளங்களை சீரமைக்க ரூ.7 ஆயிரத்து 121 கோடி செலவிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2019-ம் ஆண்டு ரூ.4 ஆயிரத்து 297 கோடி, 2020-ம் ஆண்டு ரூ.ஆயிரத்து 547 கோடி, 2021-ம் ஆண்டு ரூ.ஆயிரத்து 277 கோடி செலவிடப்பட்டு இருப்பதாகவும், இதில் மகாதேவபுராவுக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் ரூ.ஆயிரத்து 456 கோடி சாலை பள்ளங்களை சீரமைக்க செலவிடப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.


Next Story