நடப்பு நிதியாண்டில் பாஸ்மதி மற்றும் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதி 7.37 சதவீதம் உயர்வு


நடப்பு நிதியாண்டில் பாஸ்மதி மற்றும் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதி 7.37 சதவீதம் உயர்வு
x

நடப்பு நிதியாண்டில் பாஸ்மதி மற்றும் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதி 7.37 சதவீதம் உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

நடப்பு நிதியாண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையான காலத்தில் பாஸ்மதி மற்றும் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதி 7.37 சதவீதம் உயர்ந்து 126.97 லட்சம் டன்னாக உள்ளது என்று தொழில்துறை தகவல் தெரிவித்துள்ளன. ஏற்றுமதியில் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் அரிசி ஏற்றுமதி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அகில இந்திய ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் விஜய் சேத்தியா கூறிகையில்.

முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி 118.25 லட்சம் டன்னாக இருந்த நிலையில், சில வகையான அரசிக்கு ஏற்றுமதியில் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், ஒட்டுமொத்த ஏற்றுமதி இதுவரை வலுவாக உள்ளது.

மொத்த ஏற்றுமதியில் 2022-23 நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையான காலகட்டத்தில் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி 24.97 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டு 21.59 லட்சம் டன்னாக இருந்தது குறிப்படத்தக்கது. அதே வேளையில் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதி 96.66 லட்சம் டன்னிலிருந்து 102 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.

பாஸ்மதி அரிசியானது முக்கியமாக அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சவுதி அரேபியாவின் சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதே வேளையில் பாஸ்மதி அல்லாத அரிசி பெரும்பாலும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

செப்டம்பரில் மத்திய அரசு உடைந்த அரிசியை ஏற்றுமதி செய்வதைத் தடை செய்தது. அதே வேளையில் உள்நாட்டில் அரசி கிடைப்பதை அதிகரிக்கவும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும் பாஸ்மதி அல்லாத அரிசிக்கு 20 சதவீத சுங்க வரியை விதித்து. சுங்க வரி விதிப்பால் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதி பாதிக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story