திருப்பதியில் முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் - மார்ச் 1-ந்தேதி முதல் சோதனை முறையில் அமல்
திருப்பதியில் முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிலர், இடைத்தரகர்கள் மூலம் தங்குவதற்கான அறைகள், லட்டு பிரசாதம் ஆகியவற்றை வாங்கிச் செல்கின்றனர். இதனைத் தடுக்க தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் தற்போது முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. லட்டு பிரசாதம் வாங்குவது, தங்குவதற்காக அறைகளை பெறுவது ஆகியவற்றிற்காக கவுண்ட்டர்களுக்கு செல்பவர்கள் அந்த வாரத்தில் எத்தனை முறை வந்துள்ளார்கள் என்பதை இந்த தொழில்நுட்பம் காட்டிக் கொடுத்துவிடும்.
இந்த தொழில்நுட்பம் வரும் மார்ச் மாதம் 1-ந்தேதி முதல் சோதனை முறையில் அமலுக்கு வர உள்ளதாகவும், அதன் பின்னர் நிரந்தரமாக அமல்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story