திருப்பதி தேவஸ்தானம் பெயரில் போலி இணையதளங்கள் - பக்தர்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தல்


திருப்பதி தேவஸ்தானம் பெயரில் போலி இணையதளங்கள் - பக்தர்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தல்
x

போலி இணையதளம் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேவஸ்தானம் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் 300 ரூபாய் தரிசன டிக்கெட், கட்டண சேவை மற்றும் தங்கும் அறைகளை முன்பதிவு செய்வதற்கு தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். கோவிலுக்கு இணையதளம் மூலம் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்களும் இந்த இணையதளத்தை பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தானத்தின் இணையதளத்தைப் போல் போலியாக சில இணையதளங்கள் பக்தர்களிடம் மோசடியில் ஈடுபடுவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, சுமார் 40 போலி இணையதளங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து தற்போது மேலும் ஒரு போலி இணையதளம் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேவஸ்தானம் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பக்தர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும், தேவஸ்தானத்தின் மொபைல் செயலியை பயன்படுத்துமாறும் திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Next Story