8 நாட்களுக்கு முன் 2வது திருமணம்: 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தம்பதி தற்கொலை


8 நாட்களுக்கு முன் 2வது திருமணம்: 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தம்பதி தற்கொலை
x

ஸ்ரீஜாவுக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த புதன்கிழமை 2வது திருமணம் செய்துகொண்டார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் வச்சல் பகுதியை சேர்ந்த பெண் ஸ்ரீஜா (வயது 38). இவருக்கு சுராஜ் (12), சுஜின் (10), சுரபி (8) என 3 குழந்தைகள் உள்ளன.

இதனிடையே, கடந்த ஸ்ரீஜா கடந்த புதன்கிழமை ஷஜி (வயது 42) என்பவரை 2வது திருமணம் செய்துகொண்டார். தம்பதி 3 குழந்தைகளுடன் ஷஜி வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் இன்று பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். ஷஜி வீட்டில் ஸ்ரீஜா அவரது கணவர் ஷஜி குழந்தைகள் 3 என 5 பேரும் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று 5 பேரின் உடல்களையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக 3 குழந்தைகளையும் தூக்கிலிட்டு கொலை செய்துவிட்டு ஸ்ரீஜா மற்றும் அவரது கணவர் ஷஜி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2வது திருமணம் செய்த 8 நாட்கள் 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தம்பதி தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story