மேற்கு வங்கத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியை மேள தாளத்துடன் கொண்டாடிய ரசிகர்கள்
இந்திய அணி கடைசி பந்தில் பாகிஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றிபெற்ற நிகழ்வை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கொல்கத்தா,
டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இன்று நடந்த போட்டியில் பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. அதிலும் குறிப்பாக 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆட்டத்தின் கடைசி ஓவரில் கடைசி பந்தில் பாகிஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றிபெற்ற நிகழ்வை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்திய அணியின் வெற்றி தீபாவளி பரிசாக அமைந்துள்ளது. அந்த வகையில் மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி நகரில் இந்தியாவின் வெற்றியை மேள தாளங்கள் முழங்க ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். ஏற்கனவே தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகி வந்த ரசிகர்களுக்கு, இந்திய அணியின் வெற்றி கூடுதல் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.
Related Tags :
Next Story