உத்தரபிரதேசத்தில் முன்விரோதம் காரணமாக விவசாயி சுட்டுக்கொலை
முன்விரோதம் காரணமாக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி சுட்டுக்கொல்லப்பட்டார்.
பரேலி,
உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தை சேர்ந்தவர் பர்மானந்த் (வயது 40). விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த போத்தி ராமுக்கும் முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் அருகில் உள்ள சர்க்கரை ஆலைக்கு பர்மானந்த் சென்றார்.
அங்கு போத்தி ராம் தனது நண்பர்களுடன் வந்தார். அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்படவே போத்தி ராம் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் பர்மானந்தை நோக்கி சுட்டார். இதில் தலையில் குண்டுபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பர்மானந்த் உயிரிழந்தார்.
Related Tags :
Next Story