சிறுமியாக இருந்தபோது, பாலியல் தொல்லையில் ஈடுபட்ட தந்தை; டெல்லி மகளிர் ஆணைய தலைவி


சிறுமியாக இருந்தபோது, பாலியல் தொல்லையில் ஈடுபட்ட தந்தை; டெல்லி மகளிர் ஆணைய தலைவி
x

டெல்லி மகளிர் ஆணைய தலைராக உள்ள ஸ்வாதி மாலிவால் சிறுமியாக இருந்தபோது, அவரது தந்தை அவரிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார் என பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.



புதுடெல்லி,


நாடு முழுவதும் ஹோலி பண்டிகையையொட்டி மக்கள் வண்ண பொடிகளை ஒருவர் மேல் ஒருவர் தூவியும், நடனம் ஆடியபடியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். எனினும், இந்த கொண்டாட்டத்தின்போது, அத்துமீறிய சம்பவங்களும் நடந்து உள்ளன.

இதுபற்றி டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, ஒரு ஜப்பான் நாட்டு சிறுமி மீது சிலர் ஹோலி வண்ணங்களை பூசுகின்றனர். அவரை துன்புறுத்தல், பாலியல் தொந்தரவு செய்கின்றனர் என அவர் உணர்ந்து, உதவி கேட்டு கத்துகிறார். ஆனால், அந்த நபர்கள் நிறுத்தவில்லை.

இதுபற்றி டெல்லி போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். அந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டு, சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று அவர் பேசியுள்ளார்.

ஹோலி பண்டிகையின்போது நடந்த துன்புறுத்தல்கள் பற்றி வைரலான வீடியோக்களை தாமாக முன்வந்து கவனத்தில் கொண்டுள்ள அவர், அந்த வீடியோக்களை பற்றி டெல்லி போலீசார் விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, எனது தந்தை சிறுமியாக இருந்தபோது என்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். என்னை அடித்து, துன்புறுத்தினார் என பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

அவர் எப்போதெல்லாம் வீட்டுக்கு வருவாரோ, அப்போது நான் பயந்து போவேன். பயத்துடனேயே கழித்த பல இரவுகளை இன்றும் நினைவுகூர்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

சமீபத்தில், பா.ஜ.க. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான மூத்த நடிகை குஷ்பூ பேட்டி ஒன்றில், 8 வயதில் தந்தையால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட தகவலை கூறினார். அவர் கூறும்போது, என் அம்மா மிகவும் மோசமான திருமணத்தை அனுபவித்துள்ளார். தன் மனைவியை அடிப்பதும், குழந்தைகளை அடிப்பதும், தன் ஒரே மகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதும் தன் பிறப்புரிமை என நினைத்து கொண்டிருந்த ஒரு மனிதன். எனக்கு பாலியல் தொல்லை தொடங்கியபோது எனக்கு 8 வயதுதான். 15 வயதில் அவருக்கு எதிராக பேசும் தைரியம் எனக்கு இருந்தது என்று கூறினார்.


Next Story