ஜிம்மில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த நடிகர் மீது வழக்கு
ஜிம்மில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த நடிகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகர் ஷகில் கான். இவர் ஸ்டைல், எக்ஸ்கியூஸ் மி, அலாதின் அண்ட் ரமா தி சேவியர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் ஷகில் கான் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மும்பை போலீசில் பெண் புகார் அளித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் ஜிம்மில் வைத்து மற்றொரு பெண்ணுடன் பணவிவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அப்போது அந்த பெண்ணுக்கு ஆதரவாக பேசிய ஷகில் கான் தன்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
மேலும், தன்னை பற்றியும் தன் குடும்பத்தினர் பற்றியும் சமூகவலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டதாகவும் ஷகில் கான் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் ஷகில் கான் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story