நடிகை ஸ்ரீலீலாவின் தாய் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு


நடிகை ஸ்ரீலீலாவின் தாய் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
x

நடிகை ஸ்ரீலீலாவின் தாய் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பெங்களூரு:

கன்னட திரையுலகில் நடிகையாக இருந்து வருபவர் ஸ்ரீலீலா. இவரது தாய் சுவர்ணலதா. இவர், பெங்களூரு புறநகரில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து சமீபத்தில் தகராறு செய்திருந்தார். அங்கிருந்த ஊழியர்களையும் அடியாட்கள் மூலமாக சுவர்ணலதா தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சுவர்ணலதா மீது ஆனேக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சுவர்ணலதாவின் கணவர் சுபாகர் ராவ். இவர், கோரமங்களாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில், அடியாட்களுடன் குடியிருப்புக்கு சென்ற சுவர்ணலதா, கணவர் வசிக்கும் வீட்டுக்கதவை உடைத்து விட்டு அத்துமீறி நுழைந்தார்.

மேலும் வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள், சொத்து பத்திரங்களை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி தனது மனைவி மீது ஆடுகோடி போலீஸ் நிலையத்தில் சுபாகர் ராவ் புகார் அளித்தார். அதன்பேரில், சுவர்ணலதா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள். நடிகை ஸ்ரீலீலாவின் தாய் சுவர்ணலதா தனது கணவரின் வீட்டுக்கதவை உடைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story