மத்தியபிரதேசத்தில் பணிமனையில் நின்ற ரெயிலில் தீ விபத்து - பயணிகள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு
பணிமனையில் இருந்த ரெயில்வே ஊழியர்கள் போராடி தீயை அணைத்தனர்.
போபால்,
மத்தியபிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையத்தின் பணிமனையில் நேற்று பெதுல்-சிந்த்வாரா இடையே இயக்கப்படும் பயணிகள் ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மதியம் 3 மணியளவில் இந்த ரெயிலில் திடீரென தீப்பிடித்தது. ரெயிலின் 3 பெட்டிகளில் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது.
இதையடுத்து பணிமனையில் இருந்த ரெயில்வே ஊழியர்கள் போராடி தீயை அணைத்தனர். தீப்பற்றிய சமயத்தில் ரெயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ரெயிலில் எப்படி தீப்பிடித்தது என்பது உடனடியாக தெரியவில்லை எனவும், இதுபற்றி விசாரிக்கப்படும் எனவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story