ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள சர்க்கரை ஆலையில் தீ விபத்து - இருவர் பலி
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள சர்க்கரை ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
காக்கிநாடா,
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள சர்க்கரை ஆலை ஒன்றில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து காக்கிநாடா எஸ்பி ரவீந்திரநாத் பாபு கூறும்போது, "காக்கிநாடா அருகே வகலபுடியில் உள்ள சர்க்கரை ஆலை ஒன்றில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். மற்றொருவர் பலத்த காயங்களுக்கு உள்ளானார்.
சர்க்கரைப் பைகளை ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் தொழிற்சாலையில் உள்ள கன்வேயர் பெல்ட்டில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தீயணைப்பு துறையினர், மின் துறையினர் மற்றும் போலீசார் அப்பகுதியில் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது" என்று கூறினார்.