டெல்லி பா.ஜ.க. அலுவலகத்தில் தீ விபத்து


டெல்லி பா.ஜ.க. அலுவலகத்தில் தீ விபத்து
x
தினத்தந்தி 16 May 2024 9:34 PM IST (Updated: 17 May 2024 3:56 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள பண்டிட் பண்ட் மார்க் பகுதியில் அமைந்துள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் இன்று மாலை 4.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இது குறித்து டெல்லி பா.ஜ.க.வின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், சுமார் அரை மணி நேரத்தில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் அல்லது பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story