நாடு முழுவதும் நாளை டிஜிட்டல் நாணயம் அறிமுகம் - ரிசர்வ் வங்கி
நாடு முழுவதும் சோதனை முறையில் நாளை டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் டிஜிட்டல் நாணயம் அறிமுகப்படுத்தப்படும் என கடந்த பட்ஜெட்டில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதனை தொடர்ந்து நாட்டில் டிஜிட்டல் நாணயங்களை அறிமுக செய்ய தேவையான நடவடிக்கைகளை மத்திய ரிசர்வ் வங்கி துரிதப்படுத்தியது.
தற்போது புழக்கத்தில் உள்ள பணத்திற்கு, இ-ரூபாய் கூடுதல் விருப்பத்தேவாக இருக்கும். இந்த டிஜிட்டல் நாணயம் வழக்கமான ரூபாய் நோட்டுகளில் இருந்து வேறுபட்டதல்ல. ஆனால், டிஜிட்டல் முறையில் இருப்பதால் பரிமாற்றத்திற்கு எளிதாகவும், வேகமாகவும் இருக்கும். தற்போது ரூபாய் நோட்டுகளாக வங்கியில் இருப்பு வைத்திருப்பதைப்போல இந்த டிஜிட்டல் நாயணங்களை வங்கியில் இருப்பு வைத்துக்கொள்ளலாம்.
இந்நிலையில், சோதனை அடிப்படையில் நாடு முழுவதும் நாளை டிஜிட்டல் நாணையங்களை மத்திய ரிசர்வ் வங்கி நாளை அறிமுகம் செய்கிறது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கொடக் மகேந்திரா வங்கி, எஸ் பேங்க், ஐடிஎப்சி பஸ்ட் வங்கி, எச்எஸ்பிசி ஆகிய 9 வங்கிகள் மூலம் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்படுகிறது.
சோதனை அடிப்படையில் நாளை அறிமுகமாகும் டிஜிட்டல் நாணயம் ஒரு மாதத்திற்கு பின் குறிப்பிட்ட பகுதிகளில் முழுமையாக வாடிக்கையாளர்கள், வர்த்தகர்களை உள்ளிடக்கிய பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.