ஆற்றில் மீன்பிடிக்க சென்றபோது வலையில் சிக்கிய டால்பின்...! - சமைத்து சாப்பிட்டவர்களுக்கு வலைவீச்சு


ஆற்றில் மீன்பிடிக்க சென்றபோது வலையில் சிக்கிய டால்பின்...! - சமைத்து சாப்பிட்டவர்களுக்கு வலைவீச்சு
x

ஆற்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது வலையில் டால்பின் சிக்கியுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் நசீர்பூர் கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் குமார், சஞ்சய், தீவன், பாபா ஆகியோர் கடந்த 22ம் தேதி கிராமத்திற்கு அருகே உள்ள கங்கை ஆற்றில் மீன்பிடிக்க சென்றனர்.

ஆற்றில் வலையை வீசி மீன்பிடித்துக்கொண்டிருந்த நிலையில் அவர்கள் வீசிய வலையில் டால்பின் சிக்கியுள்ளது.

இதையடுத்து, டால்பினை பிடித்த 4 பேரும் அதை தங்கள் தோளில் சுமந்து கிராமத்திற்கு கொண்டு வந்துள்ளனர். பின்னர் வீட்டில் வைத்து டால்பினை வெட்டி சமைத்து சாப்பிட்டுள்ளனர். ஆற்றில் பிடித்த டால்பினை 4 பேரும் தங்கள் தோளில் சுமந்து செல்வதை அதே கிராமத்தை சேர்ந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோ வைரலான நிலையில் டால்பினை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம் என்பதால் இது குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர், டால்பினை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட ரஞ்சித் குமாரை கைது செய்தனர். எஞ்சிய 3 பேர் தலைமறைவான நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Next Story