ஆந்திராவில் பஸ் கவிழ்ந்து 5 போ் பலி: தூக்க கலக்கத்தில் டிரைவா் பஸ்சை ஓட்டியதால் விபரீதம்
ஒடிசாவில் இருந்து விஜயவாடாவிற்கு சென்று கொண்டிருந்த பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 போ் உயிரிழந்தனா்.
விசாகபட்டினம்,
ஒடிசா மாநிலத்தின் சின்னப்பள்ளியில் இருந்து இன்று அதிகாலையில் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியாா் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 போ் உயிாிழந்து உள்ளனா். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஒடிசாவில் இருந்து விஜயவாடாவிற்கு சென்று கொண்டிருந்த பஸ் அதிகாலை அல்லூர் பகுதியில் வந்த போது விபத்துக்குள்ளானது. பஸ் டிரைவா் தூக்க கலக்கத்தில் பஸ்சை ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story