மராட்டியம்: அணையில் மூழ்கி 4 இளம்பெண்கள் பலி
மராட்டியத்தில் அணையில் குளிக்க சென்ற 4 இளம்பெண்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் பொஹர் தாலுகா நரிஹான் என்ற கிராமத்தில் இன்று நடந்த குடும்ப நிகழ்ச்சியில் பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு பின் மாலை அப்பகுதியில் உள்ள பஹதர் அணையில் சில பெண்கள் குளிக்க சென்றனர். அணையில் குளித்துக்கொண்டிருந்தபோது 5 பெண்கள் தண்ணீரின் வேகத்தில் மூழ்கியும், இழுத்தும் செல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் அணை அமைந்துள்ள பகுதிக்கு விரைந்து சென்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட பெண்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட போராட்டத்திற்கு பின் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டவர்களில் 4 பெண்கள் சடலமாக மீட்கப்பட்டனர். எஞ்சிய ஒரு பெண்ணின் நிலைமை என்ன ஆனது என்பது குறித்து தெரியாததால் அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story