பீகாரில் ராமநவமி ஊர்வலத்தில் மீண்டும் வன்முறை: 144 தடை உத்தரவு


பீகாரில் ராமநவமி ஊர்வலத்தில் மீண்டும் வன்முறை: 144 தடை உத்தரவு
x

பீகாரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

பாட்னா,

பீகாரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. பீகாரின் சசரம் பகுதியில் வெடிகுண்டு வெடித்ததில் 5 பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.

குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநவமி ஊர்வல நேரத்தில் சசரம் பகுதியில் இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது.

இதில் கல் வீச்சு போன்ற சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தணிந்த நிலையில் மீண்டும் குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

ராம நவமி பண்டிகையின் போது ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து நேற்றிரவு ஏற்பட்ட புதிய மோதலைத் தொடர்ந்து பீகார்ஷரீஃப், நாலந்தா நகரில் உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Next Story