இமாசல பிரதேசம்: 7 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்; வெள்ளம், நிலச்சரிவு, 30 கல்லூரி மாணவிகள் பாதுகாப்பாக மீட்பு


இமாசல பிரதேசம்:  7 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்; வெள்ளம், நிலச்சரிவு, 30 கல்லூரி மாணவிகள் பாதுகாப்பாக மீட்பு
x
தினத்தந்தி 9 July 2023 3:37 AM GMT (Updated: 9 July 2023 4:39 AM GMT)

இமாசல பிரதேசத்தில் கனமழையை முன்னிட்டு 7 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடப்பட்டு உள்ளது.

சிம்லா,

இமாசல பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அடுத்த 48 மணிநேரத்திற்கு 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை, 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது என நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

தொடர்ந்து, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்நிலையில், இமாசல பிரதேசத்தில் இன்று காலை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால், லஹால் மற்றும் ஸ்பிடி நகரில் பெரும் பாதிப்பு காணப்பட்டது. கிரம்பு மற்றும் சோட்டா தர்ரா ஆகிய கிராமங்கள் கடுமையாக பாதிப்புக்கு ஆளாகி இருந்தன. கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து தடைப்பட்டது.

ஸ்பிடியில் இருந்து மணாலி நோக்கி சென்ற கல்லூரி மாணவர்கள் 30 பேர் நடுவழியில் சிக்கி கொண்டனர். அவர்கள் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளனர். நிலைமை சீரடைந்ததும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.


Next Story