ஹேக்கிங் முயற்சியால் ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் தாமதம் - பயணிகள் தவிப்பு


ஹேக்கிங் முயற்சியால் ஸ்பைஸ் ஜெட்  விமானங்கள் தாமதம் - பயணிகள் தவிப்பு
x

விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் பல இடங்களில் பரிதவிப்புக்கு உள்ளாகினர்.

புதுடெல்லி,

பிரபல விமானப்போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் கணிணி மென்பொருளை ஹேக்கிங் செய்ய முயற்சி நடைபெற்றதாகவும் இதனால், விமானங்களை இயக்குவதில் இன்று காலை தாமதம் ஏற்பட்டதாகவும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் கூறுகையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மென்பொருட்களை 'ஹேக்' செய்யும் முயற்சி நேற்று இரவு நடைபெற்றது. இது 'ரேன்சம்வேர்' வகையிலான தாக்குதலாகும். இதுகுறித்து தகவல் தெரியவந்ததும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் ஐ.டி. பிரிவு உடனடியாக செயல்பட்டு இந்த ஹேக்கிங் முயற்சியை முறியடித்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பிரச்னையால் ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் இன்று காலை புறப்படுவதில் சிறிதளவு தாமதம் ஏற்பட்டது. இதனால் விமான நிலையங்களில் பயணிகள் தவிப்புக்கு உள்ளாகினர்.


Next Story