ஓலா, ஊபர் ஆட்டோக்களுக்கான கட்டணம் நிர்ணயிப்பது குறித்து இன்று ஆலோசனை


ஓலா, ஊபர் ஆட்டோக்களுக்கான  கட்டணம் நிர்ணயிப்பது குறித்து இன்று ஆலோசனை
x

ஓலா, ஊபர் ஆட்டோக்களுக்கான கட்டணம் நிர்ணயிப்பது குறித்து இன்று ஆலோசனை நடக்கிறது.

பெங்களூரு: பெங்களூருவில் ஓடும் ஓலா, ஊபர் ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து, அந்த ஆட்டோக்களுக்கு போக்குவரத்து துறை தடை விதித்தது. அந்த தடையை ஐகோர்ட்டு ரத்து செய்தது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அந்த விசாரணை ஐகோர்ட்டில் வருகிற 16-ந் தேதி மீண்டும் நடைபெற உள்ளது. அப்போது ஓலா, ஊபர் ஆட்டோக்களுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாக ஓலா, ஊபர் ஆட்டோக்களுக்கான கட்டணத்தை நிர்ணயிப்பது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் இறுதிமுடிவு எடுக்க உள்ளனர்.

இதையடுத்து, பெங்களூருவில் இன்று (திங்கட்கிழமை) ஓலா, ஊபர் நிறுவனங்களின் அதிகாரிகளுடன், போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்து முடிவு எடுக்க உள்ளனர்.



Next Story