சிவமொக்கா விமான நிலைய திறப்பு விழாவுக்கு


சிவமொக்கா விமான நிலைய திறப்பு விழாவுக்கு
x
தினத்தந்தி 27 Nov 2022 9:19 PM GMT (Updated: 27 Nov 2022 9:19 PM GMT)

சிவமொக்கா விமான நிலைய திறப்பு விழாவுக்கு பிரதமா் மோடிக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

சிவமொக்கா-

எடியூரப்பா ஆய்வு

சிவமொக்காவில் விமான நிலைய கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த விமான நிலைய பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, விமான நிலைய பணிகள் நடக்கும் இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் ராகவேந்திரா எம்.பி.யும் இருந்தார். இதையடுத்து எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பிரதமர் மோடிக்கு அழைப்பு

சிவமொக்கா விமான நிலைய பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. விமான முனையம் அமைக்கும் பணி 50 சதவீதம் முடிந்துவிட்டது. மீதமுள்ள பணிகள் இரவு, பகலாக நடந்து வருகிறது. அந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு சிவமொக்கா விமான நிலையம் அடுத்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதம் பயன்பாட்டுக்கு வரும். மாநிலத்திலேயே சிவமொக்கா விமான நிலையத்தில் தான் அற்புதமான நீண்ட ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது. சிவமொக்கா விமான நிலைய திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்படும். அவர் விமான நிலையத்தை திறந்து வைப்பார். இந்த விமான நிலையத்தை மாநில அரசு மேற்கொள்ளுமா அல்லது விமான நிலைய ஆணையம் கவனிக்குமா என்பது குறித்து இன்னும் ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story