மணிப்பூர் கலவரத்தில் அந்நிய நாட்டு சதி; முதல்-மந்திரி பைரன் சிங் அதிரடி குற்றச்சாட்டு


மணிப்பூர் கலவரத்தில் அந்நிய நாட்டு சதி; முதல்-மந்திரி பைரன் சிங் அதிரடி குற்றச்சாட்டு
x

மணிப்பூர் கலவரத்தில் வெளிநாட்டு பின்னணி உள்ளது என்றும் அது திட்டமிடப்பட்ட சதி என்றும் முதல்-மந்திரி பைரன் சிங் அதிரடி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

இம்பால்,

மணிப்பூரில் மெய்தி சமூகம் மெஜாரிட்டியாக உள்ளது. இந்நிலையில், அந்த சமூகத்திற்கும் மற்றும் பழங்குடி பிரிவினருக்கும் இடையே கடந்த மே மாதம் 3-ந்தேதி கலவரம் வெடித்தது. இந்த மோதலில் பொதுமக்களில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், பலர் காயமடைந்தும் உள்ளனர். இந்த கலவரம் ஒரு மாதத்திற்கும் கூடுதலாக நீடித்து வருகிறது.

தொடர்ந்து அடிக்கடி வன்முறை பரவி வரும் சூழலில், மக்கள் அச்சம் மற்றும் பதற்றத்துடனேயே உள்ளனர். இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மணிப்பூர் முதல்-மந்திரி பைரன் சிங் செய்தியாளர்களுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், மியான்மர் நாட்டுடன் மணிப்பூர் தனது எல்லையை பகிர்கிறது. சீனாவும் அருகே உள்ளது. நமது எல்லையின் 398 கி.மீ. தொலைவு பகுதியானது காவல் இல்லாமல் உள்ளது.

நம்முடைய எல்லை பகுதிகளில் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டு உள்ளன. ஆனால், ஒரு வலிமையான மற்றும் விரிவான பலத்த பாதுகாப்பு போடப்பட்டாலும், அதுபோன்ற பரந்த பகுதியை காவல் காக்க முடியாது.

எனினும், நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை பார்க்கும்போது, இது முன்பே திட்டமிடப்பட்ட சதி என்பது போன்று காணப்படுகிறது. ஆனால் அதற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை என்பது மறுக்கவோ அல்லது உறுதியாக கூறவோ முடியாத நிலை உள்ளது என அவர் கூறியுள்ளார்.


Next Story