தேர்வில் வெற்றிபெற்றதாக சான்றிதழ் வழங்குவதாக கூறி மாணவரிடம் ரூ.20 ஆயிரம் மோசடி
தேர்வில் வெற்றிபெற்றதாக சான்றிதழ் வழங்குவதாக கூறி மாணவரிடம் ரூ.௨௦ ஆயிரம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
கலபுரகி
கலபுரகி டவுனில் கலபுரகி பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பதிவாளராக பணியாற்றி வருபவர் சஞ்சீவ். இந்த நிலையில் கல்லூரியில் நடந்த 4-வது செமஸ்டரில் நாகராஜ் என்ற மாணவர் 2 பாடத்தில் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் நாகராஜை தொடர்பு கொண்டு பேசிய சஞ்சீவ் தேர்வில் வெற்றி பெற்றதாக கூறி சான்றிதழ் தருவதாகவும், இதற்கு ரூ.30 ஆயிரம் தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதனை நம்பிய நாகராஜ் ரூ.20 ஆயிரம் கொடுத்து உள்ளார். ஆனால் கூறியபடி தேர்வில் வெற்றி பெற்றதாக சஞ்சீவ் சான்றிதழ் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து நாகராஜ், பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் சஞ்சீவ் மீது புகார் அளித்து உள்ளார். அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story