கார் வாங்க முயன்று ரூ.3 லட்சத்தை இழந்த நபர்


கார் வாங்க முயன்று ரூ.3 லட்சத்தை இழந்த நபர்
x

பெங்களூருவில் கார் வாங்க முயன்று ஒருவர் மூன்று லட்ச ரூபாய இழந்த சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு:


பெங்களூரு சிக்கபானவாராவை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 40). இவர், ஆன்லைன் மூலம் ஒரு செல்போன் செயலியை பயன்படுத்தி பழைய காரை வாங்க முயன்றார். செல்போன் செயலியில் இருந்த ஒரு காரின் உரிமையாளர், ரமேசை தொடர்பு கொண்டு பேசினார். காரை வாங்கும் முன்பாக தான் கூறும் வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்பும்படி உரிமையாளர் கூறினார். அதன்படி ரமேசும், அவர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.2.82 லட்சத்தை அனுப்பி வைத்தார்.


தன்பிறகு, மர்மநபர் தனது செல்போனை சுவிட்ச்-ஆப் செய்துவிட்டதால், ரமேசால் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் போனது. அந்த மர்மநபர், காரை கொடுக்காமலும், வாங்கிய பணம் ரூ.2.82 லட்சத்தை திரும்ப கொடுக்காமலும் மோசடி செய்திருப்பதை ரமேஷ் உணர்ந்தார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


Next Story