அரசு வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.35 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.35 லட்சம் மோசடி
x

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் விஜயாப்புராவில் நடந்துள்ளது. இதுதொடர்பாக தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

விஜயாப்புரா:

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் விஜயாப்புராவில் நடந்துள்ளது. இதுதொடர்பாக தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

அரசு வேலை

விஜயாப்புரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பண்டித்(வயது 35). இவர், தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார். இவருக்கு தனது நண்பரான நாகப்பா என்பவரின் மூலமாக மாகடி ரோடு, பேடரஹள்ளியை சேர்ந்த சந்திரகலா, அவரது கணவர் கங்காதர் நாயக்குடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அரசு வேலை வாங்கி தருவதாக பண்டித்திடம் சந்திரகலாவும், கங்காதரும் கூறினார்கள்.

தங்களுக்கு அரசு துறைகளில் உயர் அதிகாரிகளை தெரியும் என்றும், அவர்கள் மூலமாக வேலை வாங்கி கொடுப்பதாகவும் பண்டித்திடம் கூறினார்கள். இதனை நம்பிய அவரும், அரசு வேலைக்காக குறிப்பிட்ட இடைவெளியில் ரூ.35 லட்சத்தை கொடுத்திருந்தார்.

வழக்குப்பதிவு

பின்னர் அரசு வேலை கிடைத்திருப்பதாக கூறி பண்டித் வீட்டுக்கு போலி நியமன ஆணை கடிதத்தை சந்திரகலா அனுப்பி வைத்திருந்தார். அது போலியானது என்று தெரிந்ததும், சந்திரகலாவை சந்தித்து தான் கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்கும்படி பண்டித் கேட்டுள்ளார். ஆனால் பணம் கொடுக்காமல் தம்பதி மோசடி செய்து விட்டதாக கூறபபடுகிறது.

இதுகுறித்து விதானசவுதா போலீஸ் நிலையத்தில் சந்திரகலா, அவரது கணவர் கங்காதர், கலபுரகியை சேர்ந்த சசிகாந்த் ஆகிய 3 பேர் மீதும் பண்டித் புகார் அளித்தார். போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story