ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி பாஜகவில் இணைந்தார்


ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி  பாஜகவில் இணைந்தார்
x
தினத்தந்தி 7 April 2023 12:30 PM IST (Updated: 7 April 2023 12:39 PM IST)
t-max-icont-min-icon

ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் கடைசி முதல் மந்திரி கிரண் குமார் ரெட்டி, பாஜகவில் இணைந்தார்.

அமராவதி,

தனி தெலங்கானா மாநில பிரிவினைக்கு முன்பு ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் கடைசி முதல் மந்திரியாக காங்கிரஸ் கட்சி சார்பில் பதவி வகித்தவர் நல்லாரி கிரண்குமார் ரெட்டி. இவர் கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.

தெலங்கானா மாநில பிரிவினைக்கு பிறகு சமக்கிய ஆந்திரா ( ஒருங்கிணைந்த ஆந்திரா என்ற ) கட்சி தொடங்கி ஆந்திர மாநிலம் முழுவதும் போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் தேல்வி அடைந்தார். அதன் பின்னர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இதனிடையே கர்நாடகாவைத் தாண்டி தென்இந்தியாவில் தங்களது கட்சியை விரிவுபடுத்த நினைக்கும் பாஜகவுக்கு அவர் தலைமை தாங்கக்கூடும் என்று ஆந்திர வட்டாரங்களில் கூறப்பட்டு வந்தறது.

இந்த நிலையில், கிரண் குமார் ரெட்டி, தற்போது பாஜகவில் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


Next Story