காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. பசவராஜன், மனைவியுடன் பா.ஜனதாவில் இணைந்தார்


காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. பசவராஜன், மனைவியுடன் பா.ஜனதாவில் இணைந்தார்
x
தினத்தந்தி 5 May 2023 6:45 PM GMT (Updated: 5 May 2023 6:46 PM GMT)

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. பசவராஜன், தனது மனைவியுடன் பா.ஜனதாவில் இணைந்தார்.

சிக்கமகளூரு-

சித்ரதுர்கா மடாதிபதி பாலியல் வழக்கில் சிக்கி சிறைக்கு சென்ற காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. பசவராஜன், தனது மனைவியுடன் பா.ஜனதாவில் இணைந்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ. பசவராஜன்

சித்ரதுர்கா மாவட்ட காங்கிரஸ் கட்சியில் நிர்வாகியாக இருந்தவர் பசவராஜ். இவர் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். இதுபோல் சித்ரதுர்கா மாவட்ட பஞ்சாயத்து தலைவியாக சவுபாக்கியா இருந்து வருகிறார். இவர் பசவராஜின் மனைவி ஆவார். இவர்கள் 2 பேருக்கும், முருகா மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி சரணரு மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட சம்பவத்துக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இவர்கள் 2 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளி வந்தனர்.

பொதுக்கூட்டம்

இந்த நிலையில் இவர்கள் இருவரும் கர்நாடக சட்டசபை தேர்தலில் சித்ரதுகா தொகுதியில் போட்டியிட காங்கிரசில் டிக்கெட் கேட்டு வந்தனர். ஆனால் அவர்களுக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை. அதையடுத்து அவர்கள் இருவரும் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் மாலை சித்ரதுர்கா டவுனில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜனதா பொதுக்கூட்டம் நடந்தது.

பா.ஜனதாவில் இணைந்தனர்

அப்போது அங்கு வந்த பா.ஜனதா மாநில துணை தலைவர் விஜயேந்திரா முன்னிலையில், முன்னாள் எம்.எல்.ஏ. பசவராஜன் மற்றும் அவரது மனைவியும், மாவட்ட பஞ்சாயத்து தலைவியுமான சவுபாக்கியா ஆகிய இருவரும் பா.ஜனதாவில் இணைந்தனர். அவர்களுக்கு விஜயேந்திரா வாழ்த்து தெரிவித்தார். அதையடுத்து அவர்கள் இருவரும் சித்ரதுர்காவில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவித்தனர்.


Next Story