காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு உடல்நல குறைவு; ராஜஸ்தான் வருகை ரத்து


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு உடல்நல குறைவு; ராஜஸ்தான் வருகை ரத்து
x
தினத்தந்தி 10 Aug 2022 4:23 AM GMT (Updated: 2022-08-10T11:08:11+05:30)

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உடல்நல குறைவால் ராஜஸ்தான் வருகையை இன்று ரத்து செய்துள்ளார்.புதுடெல்லி,காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ராஜஸ்தானின் ஆல்வார் நகருக்கு இன்று வருகை தர திட்டமிட்டு இருந்துள்ளார். அவர் கட்சியின் நேத்ராத்வ சங்கல்ப சிவிர் கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்துள்ளார்.

இந்நிலையில், அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனால், தனது ராஜஸ்தான் வருகையை அவர் இன்று ரத்து செய்துள்ளார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

ராகுல் காந்தியின் சகோதரி மற்றும் கட்சி பொது செயலாளரான பிரியங்கா காந்திக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை அவர் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து வீட்டிலேயே அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். அவருக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.


Next Story