டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் 14-ந் தேதி விசாரணை


டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் 14-ந் தேதி விசாரணை
x
தினத்தந்தி 10 July 2023 10:15 PM GMT (Updated: 10 July 2023 10:15 PM GMT)

ஜாமீன் வழங்க மறுத்து சிறப்பு நீதிமன்ற பிறப்பித்த உத்தரவு சரியே என குறிப்பிட்டார்.

புதுடெல்லி,

மதுபான கொள்கை ஊழல் முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா, ஐதராபாத் வணிகர் அபிஷேக் போய்ன்பலி, ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பு பிரிவு பொறுப்பாளர் விஜய் நாயர் ஆsகியோரின் ஜாமீன் மனுக்களை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி தினேஷ்குமார் சர்மா விசாரித்தார்.

இந்த ஜாமீன் மனுக்கள் மீது கடந்த 3-ந் தேதி பிறப்பித்த உத்தரவில், இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஜாமீன் வழங்க மறுத்து சிறப்பு நீதிமன்ற பிறப்பித்த உத்தரவு சரியே என குறிப்பிட்டார்.

மணிஷ் சிசோடியாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. சாட்சிகளை கலைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதால் அவரது இடைக்கால ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என கடந்த மாதம் தெரிவித்து இருந்தது .

இந்த நிலையில், மதுபான கொள்கை ஊழல் முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை, சி.பி.ஐ. வழக்குகளில் ஜாமீன் கோரி மணிஷ் சிசோடியா சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுக்களை கடந்த வாரம் தாக்கல் செய்தார். சிசோடியாவின் மனைவி 2-வது முறையாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். எனவே இந்த மனுக்களை அவசரமாக விசாரிக்க கோரி மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி முன் வைத்த முறையீட்டை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஜூலை 14-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தது.


Next Story