ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி சிபு சோரன் மருத்துவமனையில் அனுமதி
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி சிபு சோரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் சிபு சோரன் (வயது 79). ராஜ்யசபை எம்.பி.யாக அவர் உள்ளார். கடந்த 2008-2009 ஆண்டிலும், பின்னர் 2009-2010 ஆண்டிலும் முதல் மந்திரியாக பதவி வகித்து உள்ளார்.
அவர் மத்திய நிலக்கரி மந்திரியாகவும் பதவி வகித்து உள்ளார். தனது தனி செயலாளர் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளான அவர், 12 வருட வழக்கின் முடிவில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், திடீரென அவர் ராஞ்சி நகரில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். எனினும், எந்த சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டு உள்ளார் என்பன உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரான அவரது மகன் ஹேமந்த் சோரன் தற்போது ஜார்க்கண்ட் முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.